‘சென்னை மக்களே ! எனக்கு இந்த உதவியை மட்டும் பன்னுங்க’ – சென்னையில் இருந்து கெஞ்சி கேட்டு வீடியோ வெளியிட்ட டேவிட் வார்னர்.. பாவம்யா இந்தாளு

விளையாட்டு

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 13 தொடர்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ள நிலையில் 14ஆவது தொடரானது வருகின்ற 9ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் நடப்பு சம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதுகின்றன. 

போட்டி ஆரம்பிப்பதற்கு இன்னும் மூன்று நாட்கள் மாத்திரமே எஞ்சியிருக்கும் நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் தங்களுடைய முதல் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு சென்று பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவரான அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் தற்போது போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருகை தந்து தனிமைப்படுத்தல் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் டேவிட் வோர்னர் தற்போது சென்னையில் தனிமைப்படுத்தல் இருக்கும் நிலையில், தான் தனிமையில் இருப்பதை உணராமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை ரசிகர்கள் சொல்லுமாறு இன்ஸ்டாகிராம் வாயிலாக உதவி கோரியுள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

நான் நேற்று பகல் சென்னை வந்தடைந்த போது நீண்ட நேரம் உறங்கிக் கொண்டேன். அதன் பிறகு தற்போது எழுந்து உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அறிவுறுத்தலின்படி ஆறு முதல் ஏழு நாட்கள் வரையில் நான் தனிமையில் இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நான் எந்தவிதமான இறுக்கத்தையும் உணராமல் இருக்க ரசிகர்களாகிய நீங்கள் எனக்கு என்ன செய்யலாம் என்ற யோசனையை சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது தங்களுடைய முதல் போட்டியில் ஏப்ரல் 11ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் எம். ஏ சிதம்பரம் மைதானத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *