திஸர பெரேராவின் அந்த சிக்ஸர். விக்கெட்டை புடுங்கிய சங்கக்கார. 3 வருடங்கள் காத்திருந்து இந்தியாவுக்கு சம்பவம் செய்த இலங்கை அணி !! வீடியோ உள்ளே

விளையாட்டு

கிரிக்கெட் உலகை நிர்வகிக்கின்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்று வருகிறது. ஆரம்பகாலங்களில் குறித்த டி20 உலகக்கிண்ண தொடரானது தொடரானது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தாலும் பின்னர் அது நான்கு வருடங்களுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது. இவ்வாறான நிலையில் ஐந்தாவது ஐசிசி டி20 உலகக்கிண்ண தொடரானது கடந்த 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்றிருந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு பக்கத்து பக்கத்து நாடுகளான இலங்கை அணியும் இந்திய அணியும் தகுதி பெற்றிருந்தன.

இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக ஐ.சி.சி இருபது-20 உலக கிண்ணத் தொடரின் சம்பியன் மகுடத்தை சூடியது. வெற்றியாளரை தீர்மானிக்கின்ற மாபெரும் இறுதிப் போட்டியானது கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி பங்களாதேஷின் டாக்காவில் அமைந்துள்ள சரி பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 131 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி 17.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் போட்டியில் வெற்றி பெற்று சம்பியன் மகுடத்தை சூடியது.

இலங்கை அணி கடந்த 2011-ம் ஆண்டு ஐ.சி.சி உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியுடன் கிண்ணத்தை இழந்ததன் பின்னர் 3 வருடங்கள் கழித்து இந்திய அணியுடன் ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி டி20 உலக கிண்ணத்தை கைப்பற்றி இன்றுடன் ஆறு வருடங்கள் நிறைவு பெறுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *