மும்பை இந்தியன்ஸின் காலை உ டைக்க வேண்டுமானால் அது இந்த அணியால் தான் முடியும் – வெறித்தனமாக பேசிய ஆகாஷ் சோப்ரா

விளையாட்டு

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13 தொடர்கள் இதுவரையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ள நிலையில் 14-வது தொடரானது இன்று ஆரம்பமாகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தமாக 60 போட்டிகள் நடைபெற உள்ளன. 56 லீக் சுற்று போட்டிகளும் 4 ப்ளேஓப் சுற்று போட்டிகளும் நடைபெற உள்ளன. கடந்த வருடம் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சம்பியன் பட்டத்தை சுவைத்துக் கொண்ட ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது ஐந்து தடவைகள் சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அதிக தடவைகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஒரு அணியாக திகழ்கிறது.

இவ்வாறான நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை தடுக்க வேண்டுமானால் அது இந்த அணியால் தான் முடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

தற்போதுள்ள அணிகளின் பலத்தின் படி மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஒரு முறை சம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதே நேரத்தில் அவர்களின் வெற்றிப்பாதைக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கெப்பிடல்ஸ் அணியால் மாத்திரமே முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி கெப்பிடல்ஸ் அணி மிகப் பலம் பொருந்திய அணி என்பது நாம் கடந்த தொடரில் பார்த்திருப்போம். அனைத்து துறைகளிலும் வீரர்கள் பொருத்தமாக உள்ளனர். இந்த முறை ரிஷப் பண்ட் தலைமையிலும் டெல்லி அணி பலமாகத் திகழும். அதற்கு காரணம் இந்திய வீரர்களில் ஷிகர் தவான், அஜிங்க்ய ரஹானே, ப்ரீத்தி ஷா, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் ஷர்மா போன்ற அதிக அனுபவமும் கொண்ட வீரர்கள் காணப்படுவதுடன்,

உமேஷ் யாதவ், அக்சர் படேல், இஷாந்த் சர்மா, காகிசோ ரபாடா, அன்ரிச் நோட்ரியா போன்ற வீரர்களும் உள்ளனர். இதன் அடிப்படையில் டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு நிச்சயம் மும்பை அணி கடுமையான போட்டியாக இருக்கும் என ஆகாஸ் சோப்ரா அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *