‘கேப்டன் 7’ – தல தோனி நடிக்கும் அனிமேஷன் தொடர்! வெளியாகும் திகதி மற்றும் முழு விபரம் உள்ளே

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனை அணித்தலைவராக மகேந்திர சிங் டோனி காணப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட் பேரவை உடைய 3 கிண்ணங்களையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த ஒரே ஒரு அணித்தலைவராக மகேந்திர சிங் தோனி சாதனை படைத்துள்ளார். அது இந்திய அளவில் மாத்திரமல்ல முழு உலக சாதனையாக அமைந்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் உலகில் எந்த ஒரு அணித்தலைவரும் ஐசிசி டி20 உலகக் கிண்ணம், ஐசிசி உலக கிண்ணம் மற்றும் ஐசிசி சம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று கிண்ணங்களையும் வென்று கொடுக்கவில்லை.

அந்த சாதனையை தோனி படைத்து படைத்துள்ளார். அதுமாத்திரமல்லாமல் கிரிக்கெட் உலகில் கேப்டன் கூல் என சிறந்த தலைமைத்துவப் பண்பையும் மகேந்திர சிங் தோனி கொண்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் உலகில் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்றுக்கொண்ட மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி அமேசன் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளார். கேப்டன்-7 என பெயரிடப்பட்டுள்ள அந்த தொடரை டோனியும் அவரது மனைவி ஷாக்ஷியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

கிரிக்கெட் தவிர தன் வாழ்க்கையில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து அந்த தொடர் தயாரிக்கப்படவுள்ளதாக தோனி தெரிவித்துள்ளார். இந்த தொடர் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. கிரிக்கெட் மட்டுமல்லாது எனது பிற ஆர்வங்களையும் இந்த தொடர் உயிர்ப்பிக்கும் என நினைக்கிறேன். இதன் கதை அருமையாக உள்ளது. என டோனி அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *