இந்த மனிசன் Ground-ல இறங்கினாலே சாதனை தான் செய்வாரு.. ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் 2021ஆம் ஆண்டுக்கான 14வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் ஆனது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான குறித்த தொடரின் போட்டிகள் ஒவ்வொரு நாளும் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் தொடரின் நான்காவது லீக் போட்டி நேற்றைய தினம் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் இடையில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியைத் தழுவிக் கொண்டது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களை குவித்தது. 222 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 4 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியினுடைய துடுப்பாட்டத்தில் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். கிறிஸ் கெய்ல் இந்த போட்டியில் சிக்சரை விளாசியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 350 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார்.

அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஏ.பி டிவில்லியர்ஸ் 237 சிக்ஸர்களை விளாசி இரண்டாவது இடத்தில் காணப்படுகிறார். மூன்றாவது இடத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி 216 சிக்சர்களுடன் காணப்படுகிறார். ரோகித் சர்மா 214 சிக்சர்களையும், விராத் கோலி 207 சிக்ஸர்களையும் விளாசி 3-வது மற்றும் 4-வது இடங்களில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *