ஜாஹீர் கான், நெஹ்ரா வரிசையில் இவர் நிச்சயம் அசத்துவார். நேற்றைய போட்டியின் மறைமுக கதாநாயகனான 23 வயது பவுலரை புகழ்ந்த சேவாக்

விளையாட்டு

கிரிக்கெட் உலகின் திருவிழா என வர்ணிக்கப்படுகின்ற 14ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது தற்போது இந்தியாவில் மிகப்பெரிய சவாலுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. தொடரின் நான்காவது லீக்  போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோ தின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதி ஓவரில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களை குவித்தது. 222 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 217 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 4 ஓட்டங்களினால் இவ்வாறு தோல்வியை தழுவியது. 

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் அந்த அணியில் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடிய 23 வயதான இடதுகை வேகப்பந்து வீச்சாளரான சேட்டன் சக்கரிய்யா மிகவும் அற்புதமாக பந்து வீசினார். அவர் இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தனது அறிமுக போட்டியிலேயே மிகவும் சிறப்பாக விளையாடிய அவருக்கு தற்போது பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறானதொரு நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான விரேந்திர சேவாக் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் விளையாட்டு இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். சேட்டன் சக்காரியாவின் பயமில்லாத செயல்பாட்டை இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்களான ஜாஹீர் கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ராவுடன் ஒப்பிட்டுள்ளார். 

சக்காரியாவின் பெயரை, அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டபோதே தாம் கேட்டதாகவும், ஆனால் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் உலகத் தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக பயமில்லாமல் பந்துவீசுவது மிகப்பெரிய ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *