இதெல்லாம் அசால்ட்.. போக போக பாருங்க மொத்த வித்தையையும் இறக்குறோம் ! உற்காகமாக பேசிய ரஷித் கான்

விளையாட்டு

கிரிக்கெட் உலகின் திருவிழா என வர்ணிக்கப்படுகின்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கொ ரோனா வைர ஸ் தாக்கம் காரணமாக கடந்த வருடம் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் தொடர் நடைபெற்றுவந்த நிலையில் இந்த வருடம் ரசிகர்கள் இல்லாத மூடிய மைதானத்தில் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அண்மையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த வருடத்திற்கான தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 187 ஓட்டங்களை குவித்தது. 188 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான ரஷீட் கான் 4 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இவ்வாறான நிலையில் போட்டி முடிவடைந்ததன் பின்னர் ரஷீட் கான் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்திருந்தார். அனைவரும் சிறப்பாக விளையாடினோம். ஒரு பவுலிங் யூனிட்டாக, நாங்கள் நன்றாக பந்து வீசினோம், ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் நன்றாக பேட் செய்தோம். ஆனால் கடைசியில் 10 ஓட்டங்களில் சிக்கி விட்டோம்.

எங்களது இந்த முதல் போட்டியில் நாங்கள் 100 சதவீத சிறப்பை கொடுத்திருக்கிறோம். இந்த போட்டியில் இருக்கும் நல்லதை எடுத்துக் கொண்டு, அடுத்த போட்டியை நோக்கி பயணிக்க இருக்கிறோம். இந்த தொடரில் எந்தவொரு அணியையும் நாங்கள் எளிதாக எதிர்கொள்வோம். எங்களிடம் வலுவான அணி மற்றும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படும் வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் எங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *