எனக்கிட்ட படிச்ச நீ என்ன முந்தலாமா ! கோலியை விடாமல் துரத்தும் தல தோனி. முதல் வீரராக எம்.எஸ் டோனி ஐ.பி.எல் சாதனை நிகழ்த்தினார்.

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற பிரபலமான டி20 லீக் தொடர்களில் ஒன்றான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் காணப்படுகிறது. அந்த வகையில் 14ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது இந்த வருடம் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி வரை இந்தியாவில் 6 மைதானங்களில் நடைபெற உள்ளது. அந்த அடிப்படையில் தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தொடரின் எட்டாவது லீக் போட்டியானது நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த போட்டியில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் காப்பாளராகவும், அந்த அணியின் தலைவராகவும் விளையாடும் மகேந்திர சிங் தோனி நேற்றைய போட்டியின் மூலம் 200வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார்.

இதன் மூலம் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இது ஒரு பக்கம் இருக்க ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளில் களமிறங்கிய வீரர்கள் வரிசையில் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோலி முதலிடத்தில் காணப்படுகிறார்.

அவர் 209 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் மகேந்திர சிங் தோனி தற்போது 200 போட்டிகளில் விளையாடி விராத் கோலியை நெருங்கி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *