உண்மையிலேயே இவங்க ரெண்டு பேருக்கும் வேற லெவல் மனசு.. ரஷீட் கான், மொஹமட் நபி, கலீல் அஹமட் ஆகியோருடன் நோன்பு பிடித்துக்கொண்ட வோர்னர், வில்லியம்சன் !!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14ஆவது பருவ காலத்திற்கான தொடரானது கடந்த 9ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகி கடந்த 10 நாட்களாக சென்னை மற்றும் மும்பை ஆகிய மைதானங்களில் நடைபெற்று வருகிறது. போட்டியில் ஒவ்வொரு அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி என்றுமில்லாதவாறு மோ சமான ஒரு நிலைமையை சந்தித்திருக்கிறது.

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் இரண்டாவது தகுதிகாண் போட்டிக்கு வரை சென்ற டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆண்டு 3 போட்டிகளிலும் தோல்வி தழுவியுள்ளமை ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது.

இவ்வாறானதொரு நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த முஸ்லிம் வீரர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்காக சக வீரர்களான முஜிபுர் ரஹ்மான், மொஹமட் நபி, ரஷீட் கான், கலீல் அஹமட் ஆகியோருடன் இணைந்து கொண்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவரான டேவிட் வோர்னர் மற்றும் சன்ரைஸஸ் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த வீரர் கேன் வில்லியம்சன் ஆகிய 2 பேரும் இவர்களுடன் இணைந்து நோன்பு நோற்றனர்.

அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *