என்னாது நடராஜன் விலகிட்டாரா….. தமிழ்நாடு முழுவதும் சோக மயம். ஐ.பி.எல் 2021 தொடரிலிருந்து விலகிய நம்ம நடராஜன். காரணம் இதுதான் !

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற மிக பிரபலமான டி20 லீக் தொடர்களில் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14வது பருவ காலத்திற்கான தொடரானது தற்போது இந்தியாவின் மும்பை மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான 14-ஆவது ஐபிஎல் தொடரின் முதற்கட்ட லீக் போட்டிகள் தற்போது ஒவ்வொரு நாளும் மிகவும் விறுவிறுப்பு தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது. இது ஒரு பக்கமிருக்க என்ற நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரரான தங்கராசு நடராஜன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் மாத்திரமே தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் விளையாடி இருந்தார். அடுத்த 2 போட்டிகளிலும் அவர் களமிறங்கவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினுடைய தலைவர் டேவிட் வோர்னர்,

நடராஜனுக்கு முழங்காலில் கா யம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் தான் அவருக்கு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். மேலும் ஸ்கேன் பரிசோதனையின் பின்னர் அடுத்த ஒரு வாரத்திற்கு அவரால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலக உள்ளதாகவும் அவர் உபாதைகளில் இருந்து குணம் அடைவதற்காக பெங்களூரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் சென்று பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக கிரிக்கெட்டில் மிகப்பெரிய சொத்தாக கருதப்படுகின்றன நடராஜன் இழப்பு தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *