அடடா என்னதொரு அருமையான புதிய மாற்றம்.. 4 ஓவர்கள் பவர்பிளே.. 10 ஓவரில் பெற்றிபெற்றால் 1 புள்ளி.. முழு விபரம் உள்ளே

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் நடைபெற்றுவரும் இருபதுக்கு இருபது லீக் தொடர்களில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் பிக்பாஷ் லீக் தொடரும் பிரபல்யம் வாய்ந்த லீக் தொடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இருபதுக்கு இருபது லீக் கிரிக்கெட் உலகில் நாளுக்கு நாள் புதிய புதிய விதிமுறைகள் அதிரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பிக்பாஷ் லீக் தொடரில் போட்டிகளை இன்னும் சுவாரஸ்யப்படுத்த புதிய மூன்று விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை

1. பவர் சேர்ஜ்

இருபதுக்கு இருபது போட்டிகளில் வழமையாக முதல் 6 ஓவர்கள் பவர்பிளே ஓவர்களாக கருதப்படும். ஆனால் பிக்பேஷ் லீக் தொடரில் முதல் 4 ஓவர்கள் பவர்பிளே ஆக கருதப்படும்.

எஞ்சிய 2 ஓவர்களையும் துடுப்பெடுத்தாடும் அணி போட்டியின் 11ஆவது ஓவருக்குப் பின் (11-20) தேவைப்படும் இடத்தில் பயன்படுத்த முடியும்.

2. பாஷ் பூஸ்ட்

பிக்பாஷ் லீக் தொடரின் வழமையான விதிமுறைப்படி வெற்றிபெறும் அணிக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும். தற்போது அது மாற்றப்பட்டு வெற்றிபெறும் ஒரு அணிக்கு 3 புள்ளிகள் மாத்திரம் வழங்கப்படும். ஆனால் எஞ்சிய ஒரு புள்ளியும் வித்தியாசமான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் குறித்த விதிமுறையானது 10 ஓவர்களை மையப்படுத்தி 1 புள்ளி வழங்கப்படுகிறது.

அதாவது முதலில் துடுப்பெடுத்தாடும் அணி முதல் 10 ஓவர்களில் 80 ஓட்டங்களை பெற்றிருந்தது. இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணி முதல் 10 ஓவர்களில் 80 ஓட்டங்களைவிட அதிகமாக பெற்றிருப்பின் அந்த அணிக்கு 1 புள்ளி வழங்கப்படும்.

மாறாக இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணி 80 ஓட்டங்களை விட குறைவாக பெற்றிருப்பின் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய அணிக்கு 1 புள்ளி வழங்கப்படும். இதற்கு போட்டியில் வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை.

3. முக்கிய காரணி வீரர்

குறித்த விதிமுறையானது மாற்று வீரரை இரண்டு அணியிலும் அனுமதிப்பது ஆகும். ஆனால், இந்த வீரர் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

போட்டியின் முதல் பாதி ஆட்டத்திற்குப் பிறகுதான் மாற்று வீரர் களம் இறங்க முடியும். ஒரு வீரர் மாற்று வீரராக களம் இறங்கினால், அவர் ஒரு பந்து வீச்சாளராக இருந்தால், ஒரு ஓவர் மட்டுமே பந்து வீச முடியும். அவர் துடுப்பாட்ட வீரராக இருந்தால், அதற்கு முன் களம் இறங்கியிருக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *