சிஎஸ்கே இரசிகனின் இரத்த ஓட்டத்தை கொதிக்க வைத்த கிரண் பொல்லார்ட்… என்னா அ டி அ டிக்குறான் பாரு.. வீடியோ உள்ளே

விளையாட்டு

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் தொடரின் 27வது லீக் போட்டியானது நேற்றைய தினம் டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடின. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 218 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 72 ஓட்டங்களையும், மொயின் அலி 58 ஓட்டங்களையும், பாப் டு பிளசிஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

219 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 81 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் கிரண் பொல்லார்ட் தனிமனிதனாக நின்று 34 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 87 ஓட்டங்களை குவித்து இறுதிப் பந்தில் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக மும்பை அணியின் துடுப்பாட்டத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கிய கிரண் பொல்லார்ட் தெரிவு செய்யப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி 2019 என்ற இமாலய இலக்கை துரத்தியடித்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் துரத்தியடிக்கப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *