பஞ்சாப் அணிக்கு சம்பவம் செய்து கடைசில சிஎஸ்கே வுக்கே ஆப்பு வைத்த ரிஷப் பண்ட்.. (நம்மல விட மாட்டான் போல இருக்கே)

விளையாட்டு

தற்போது நடைபெற்று வரும் 2021ஆம் ஆண்டுக்கான 14ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் உடைய 29ஆவது லீக் போட்டியானது நேற்று இரவு அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கெப்பிடல்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை குவித்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் உடைய துடுப்பாட்டத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவும் அணித்தலைவராக களமிறங்கிய மயங்க் அகர்வால் இறுதிவரை போராடி தனிமனிதனாக ஆட்டமிழக்காது 99 ஓட்டங்களை குவித்தார். 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி 17.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் 167 ஓட்டங்களை பெற்று போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை ஒன்றை பதிவு செய்தது.

போட்டியின் ஆட்ட நாயகனாக 99 ஓட்டங்களை குவித்த மயங்க் அகர்வால் தெரிவுசெய்யப்பட்டார். தற்போது புள்ளி பட்டியலில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை காலமும் கடந்த ஒரு வார காலமாக முதலிடத்தில் காணப்பட்ட மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது இரண்டாவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

டெல்லி கெப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இவ்வாறு முதல் இடத்தை பிடித்துள்ளது. அடுத்த இரண்டாவது இடத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *