ஐ.சி.சி டி உலகக்கிண்ணம் இந்தியாவில் இல்லை.. ஐக்கிய அரபு அமீரத்தில் நடத்த பி.சி.சி.ஐ முடிவு !!

விளையாட்டு

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரானது அப்போது முழு உலகிலும் நிலவிய கொ ரோனா வை ரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குறித்த தொடரானது இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ளது. எதிர்வருகின்ற ஒக்டோபர் – நவம்பர் மாத காலப் பகுதியில் குறித்த இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் இந்தியாவின் 9 மைதானங்களில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இவ்வாறான நிலையில் இந்தியாவில் கொ ரோனா வைர ஸின் மூன்றாவது அலை அதிவேகமாக பரவி வருகின்ற நிலையில் குறித்த உலகக்கிண்ண தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் காணப்படுகின்ற நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் காணப்படுகின்ற மைதானங்களை அதற்கான தயார்படுத்தலில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இங்கிலாந்தின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை ஆகியன தொடர்ந்தும் நட்புடன் காணப்படுகிறதன் அடிப்படையிலேயே கடந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரும் கூட ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றிருந்தது. இவ்வாறான நிலையில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படலாம் என ஊகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *