கேன் வில்லியம்சனுக்கு கிடைத்த அதிஸ்டம் போன்று நம்ம தமிழக வீரர் தினேஸ் கார்த்திக்-க்கு கிடைக்கவுள்ள அதிஸ்டம் !! வாழ்த்தும் ரசிகர்கள்

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது தற்சமயம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகின்ற குறித்த தொடரானது ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் 14வது தொடரானது தற்சமயம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தொடர் ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய முதல் சுற்றுப் போட்டியில் விளையாடி முடித்திருக்கிறது.

இரண்டாவது சுற்று போட்டிக்காக ஒவ்வொரு அணிகளும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் புள்ளி பட்டியலில் தற்போது இறுதி இடத்தைப் பிடித்திருக்கும் முன்னாள் சம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரும் தோல்விகளை சந்தித்து வருகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் டேவிட் வோர்னர் தலைமையில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்று இருக்கின்ற நிலையில் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த டேவிட் வார்னர் நீக்கப்பட்டு தற்போது புதிய தலைவராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் ஹைதராபாத் அணியை போலவே கொல்கத்தா அணியும் மிக மோசமாக விளையாடி வருகிறது. 7 போட்டிகளில் இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று மற்ற ஐந்து போட்டிகளிலும் தோல்வி பெற்றுள்ளது. அந்த அணியை இயன் மோர்கன் சரியாக தலைமை தாங்க தவறியுள்ளதாக அந்த அணி கருதி வருகிறது. மேலும் 7 போட்டிகளில் வெறும் 92 ரன்களை மட்டுமே எடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே ஹைதராபாத் அணியில் ஏற்பட்ட மாற்றம் போல கொல்கத்தா அணியும் ஒரு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. கேப்டன் பதவியை மோர்கனிடமிருந்து தினேஷ் கார்த்திக்கு கேப்டன் பதவியை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *