டேவிட் வோர்னருக்கு ஹைதராபாத் அணியில் இது கடைசி சீசன்… வெடித்தது பூகம்பம் ! – முன்னாள் வீரர் பகீர் தகவல்

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது தற்சமயம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகின்ற குறித்த தொடரானது ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் 14வது தொடரானது தற்சமயம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தொடர் ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய முதல் சுற்றுப் போட்டியில் விளையாடி முடித்திருக்கிறது.

இரண்டாவது சுற்று போட்டிக்காக ஒவ்வொரு அணிகளும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் புள்ளி பட்டியலில் தற்போது இறுதி இடத்தைப் பிடித்திருக்கும் முன்னாள் சம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரும் தோல்விகளை சந்தித்து வருகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் டேவிட் வோர்னர் தலைமையில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்று இருக்கின்ற நிலையில் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த டேவிட் வார்னர் நீக்கப்பட்டு தற்போது புதிய தலைவராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

டேவிட் வோர்னரின் ரசிகர்கள் அனைவரும் சோகத்துடன் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், டேவிட் வார்னருக்கு பிளேயேங் லெவனில் இடம் கொடுக்காதது குறித்து தென்னாப்பிரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில்,

‘டேவிட் வோர்னரை வெளியேற்றியதை என்னால் நம்ப முடியவில்லை. ஒருவேளை தலைமை பொறுப்பை கேன் வில்லியம்சனுக்கு மாற்ற விரும்பியிருந்தால் அடுத்த சீசனில் செய்திருக்க வேண்டும். வோர்னர் சிறந்த துடுப்பாட்ட வீரர். அவரை எப்படி அமர வைக்கலாம். நான் எனது லெவனில் வார்னருக்கு எப்போதும் இடம் கொடுப்பேன்.

மறைமுகமாக அணிக்குள் ஏதோ நடக்கிறது போல் தெரிகிறது. ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னருக்கு இது கடைசி சீசனாக கூட இருக்கலாம்’ என்று ஸ்டெய்ன் பேசியிருக்கிறார்.

LONDON, ENGLAND – JUNE 2 : Dale Steyn of South Africa holds his shoulder after the ICC Cricket World Cup Group Match between South Africa and Bangladesh at the Kia Oval on June 2, 2019 in London, England. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *