2021 ஐ.பி.எல் சம்பியன் யார் ? டெல்லி அணி முதலிடத்தில் இருந்தாலும் சென்னை அணிக்கு தான் மாஸ் வாய்ப்பு !! – முழு விபரம் உள்ளே

விளையாட்டு

2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 30ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. தொடரில் முதல்கட்ட போட்டியானது மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நிறைவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட லீக் போட்டிகள் டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு மைதானங்களில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இரண்டு வீரர்களுக்கும் கொ ரோனா வைர ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களுர் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இவர்கள் இருவரையும் தொடர்ந்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சேர்ந்த மூன்று பேருக்கும் டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த இரண்டு வீரர்களுக்கும் கொரோ னா வை ரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டு இருந்தது.

இவ்வாறான நிலையில் ஏதேனும் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தொடர் எப்போது மீண்டும் ஆரம்பமாகும் என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோ னா தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தொடரானது மீண்டும் நடைபெறுமா அல்லது கைவிடப்பட்டு வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது அனைவருக்கும் எழுந்திருக்கிறது.

இந்த இடத்தில் புள்ளி பட்டியலில் தற்போது டெல்லி அணி முதலிடத்தில் காணப்படுகிறது. அந்த அணி 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகிறது. இதற்கு அடுத்ததாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது. சென்னை அணியின் ரன்ரேட் அடிப்படையில் 101.263 முன்னிலையில் உள்ளது.

ஆனால் டெல்லி அணி 100.547 என்ற விகிதத்தில் உள்ளது. இதனால் புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி அறிவிப்பார்களா ? அல்லது ரன்ரேட் அடிப்படையில் அறிவிப்பார்களா ? என்று சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பிசிசிஐ விதிமுறைப்படி இந்த தொடரானது கைவிடப்பட்டால் யாரும் சம்பியன் என அறிவிக்கப்பட மாட்டார்கள்.

ஏனெனில் ஒட்டுமொத்த தொடரும் கைவிடப்படும் போது யாரும் வெற்றியாளர்கள் கிடையாது. யாரும் தோல்வியாளர்கள் கிடையாது. அதே போன்று பரிசுகளும் கிடைக்காது. இந்த வருடம் நடைபெற்ற தொடர் பாதியிலேயே நின்றதாக தெரிவிக்கப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *