நாங்க என்னையா பவம் பண்ணினம்.. பொத்திப் பொத்தி வளர்த்த கிளி.. மொத்தமா பறந்து போயிடுச்சே !!!! – புலம்பித்தள்ளும் ஆர்.சி.பி ரசிகர்கள் !

விளையாட்டு

2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 30ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நான்கு வீரர்களுக்கும் கொரோ னா வை ரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டு இருந்தது. இவ்வாறான நிலையில் ஏதேனும் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரையில் 13 ஐ.பி.எல் தொடர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி ஒரு வருடமும் ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றவில்லை. இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி அணிக்கு பல வெற்றிகளை குவித்து வருகின்ற விராட் கோலி வழிநடத்துகின்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஒரு தடவையேனும் கிண்ணத்தைக் கைப்பற்றி கொடுக்கவில்லை என்ற ஏக்கம் அவரிடத்தில் தொடர்ந்து காணப்படுகிறது.

2013ஆம் ஆண்டு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட விராட் கோலி அணியை சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். ஆனால் இறுதி நேரத்தில் ஏற்படுகின்ற தவறு காரணமாக பெங்களூரு அணி தொடர்ந்தும் கிண்ணத்தை இழந்து கொண்டே வருகிறது. 2021ஆம் ஆண்டு தொடரானது பெங்களூரு அணிக்கு எந்த ஒரு பருவ காலத்திலும் இல்லாத அளவுக்கு வெற்றிகரமானதாக ஆரம்பித்திருந்தது.

ஆரம்பத்தில் முதல் நான்கு போட்டிகளில் விளையாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 4 போட்டிகளிலுமே வெற்றியைப் பெற்றுக் கொண்டிருந்தது. அதனடிப்படையில் ஐபிஎல் தொடரானது நேற்றைய தினம் ஒத்தி வைக்கப்படுவதற்கு முன்னர் 7 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் மாத்திரம் பெங்களூர் அணி தோல்வியைத் தழுவியது.

எனவே 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளுடன் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி மூன்றாவது இடத்தில் காணப்பட்டது. எப்படியாவது இந்த தடவை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு பெருமளவில் உறுதியாக இருந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாக காணப்படுகிறது.

மீண்டும் தொடர் ஆரம்பமாகி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி இதே ஃபார்மில் மீண்டும் தொடரில் விளையாடி வெற்றி கிடைக்குமா என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே காணப்படுகிறது. இவ்வாறு எதிர்காலத்தில் தொடர் நடைபெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *