பாகிஸ்தானில் விளையாடப்போகும் இலங்கை அணியின் 2 பிரபல வீரர்கள் !! யாருக்கும் கிடைக்காத பாரிய ஜக்பொட்

விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடத்தப்படும் இருபதுக்கு 20 லீக் தொடர்களில் ஒன்றான பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் ஆறாவது பருவ காலத்திற்கான தொடரானது கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் கொ ரோனா வை ரஸின் தாக்கம் வீரர்கள், அதிகாரிகளை தாக்கியதை தொடர்ந்து 14 லீக் போட்டிகள் மாத்திரம் நடைபெற்ற நிலையில் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடரில் முன்னதாக விளையாடிய ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் தொடரில் விளையாட முடியாத நிலைக்கு உள்ளானதன் காரணமாக குறித்த வீரர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக இன்னும் ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் அணிகளில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த அடிப்படையில் இலங்கையில் இருந்து இரண்டு சகலதுறை வீரர்கள் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட உள்ளனர். சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரரான சீக்குகே பிரசன்ன லாஹூர் கலாண்டர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். அவர் இங்கிலாந்து அணி வீரர் ஜோ டென்லிக்கு மாற்று வீரராக இடம் பிடித்துள்ளார்.

கராச்சி கிங்ஸ் அணியில், ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான மொஹமட் நபிக்கு பதிலாக இலங்கை அணியின் சகலதுறை வீரரான திஸர பெரேரா இடம்பிடித்துள்ளார். பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளானது ஜூன் 2ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 20ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *