‘யாரு சாமி நீ’. 144 கி.மீ வேகம்.. சிதறிய ஸ்டம்ப்.. மிரண்டு போய் நின்ற யுனிவெர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல்..!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14வது பருவத்திற்கான தொடரானது கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பமாகி 29 லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகின்ற மூன்று அணிகளை சேர்ந்த நான்கு வீரர்களுக்கு கொரோ னா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரானது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஐபிஎல் தொடரில் இறுதியாக நடைபெற்ற 29வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல் கெப்பிடல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வழமையான அணித்தலைவராக கே எல் ராகுல் அணியில் விளையாடவில்லை. அவர் உடல் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அணியின் தலைவராக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மயங்க் அகர்வால் விளையாடினார்.

இந்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி இலகுவான வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெய்ல் போல்டான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதல் இன்னிங்ஸில் டெல்லி கெப்பிடல்ஸ் வீரர் ரபாடா வீசிய 6-வது ஓவரை கிறிஸ் கெய்ல் எதிர்கொண்டார்.

அந்த ஓவரின் முதல் பந்தை கெய்ல் சிக்சருக்கு விளாசினார். அடுத்த பந்தை சுமார் 144 கிமீ வேகத்தில் ஃபுல் டாசாக ரபாடா வீசினார். இது கெய்லை போல்டாகி ஸ்டம்பை சிதற வைத்தது. இதனால் ஒரு நொடி கிறிஸ் கெய்லே மிரண்டு போய்விட்டார். இந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *