ஒருநாள் தரவரிசையில் யாருமே எதிர்பார்க்காத மாற்றம்… உலகக் கிண்ணத்தை கைப்பற்றாத அணி முதலிடத்தில் !! இந்திய அணிக்கு பாரிய பின்னடைவு

விளையாட்டு

முழு உலகிலும் நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டிகளை ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை என்கின்ற ஒரு சபை கட்டுப்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் போட்டிகளில் விளையாடுகின்ற அணிகளுக்கும் ஒவ்வொரு விதமான தரவரிசைகளை ஐசிசி வைத்துக் கொண்டிருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரு தொடர் முடிவுக்கு வருகின்ற போது சர்வதேச கிரிக்கெட் பேரவையானது அணிகளின் தரவரிசைகளை அப்டேட் செய்து கொண்டு வரும்.

அந்த அடிப்படையில் ஒருநாள் தொடரின் தரவரிசை பட்டியல் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் புதிய ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. அன்மையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியதை தொடர்ந்து இவ்வாறு முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்து இவ்வாறு முதலிடத்திற்கு முன்னேறி அதன் காரணமாக அவுஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதேவேளை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது. இந்திய அணி தற்போது மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *