யாரும் எதிர்பாராத வித்தியாசமான முறையில் கைவிடப்பட்ட 4 கிரிக்கெட் போட்டிகள் !! காரணங்களை பார்த்தால் நீங்களே சாக் ஆகிடுவிங்க

விளையாட்டு

கிரிக்கெட் போட்டிகளானது மழை காரணமாக தான் கைவிடப்படும். ஆனால் ஒரு சில போட்டிகள் அசாதாரண சூழ்நிலை காரணமாக கைவிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு கைவிடப்பட்ட நான்கு போட்டிகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தலாம்.
2006ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் பந்தைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைக்கப்பட இங்கிலாந்து அணிக்கு 5 ஓட்டங்களால் பெனால்டியாக வழங்கப்பட்டது. பின்னர் தேநீர் இடைவேளைக்காக ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்ற பாகிஸ்தான் வீரர்கள் 15 நிமிடங்கள் தாண்டியும் களத்திற்கு திரும்பவில்லை.

நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் தொடர்ந்து இருந்தார்கள். அதன் பின்னர் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டது. பின்னர் நடுவர்கள் கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

1998ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 10.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போட்டி முழுமையாக கைவிடப்பட்டது. அதற்கு காரணம் ஆடுகளத்தின் தன்மையில் ஏற்பட்ட மாற்றம் என தெரிவிக்கப்பட்டது. அந்த போட்டிக்கு பதிலாக இன்னும் ஒரு தினத்தில் அந்த போட்டி நடத்தப்பட்டது.

1975ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் பார்வையாளர்கள் சிலர் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தின்போது ஆடுகளத்தை சேதப்படுத்தினார்கள். சிறையிலிருந்த குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவர்கள் இந்த செயலை செய்து இருந்தனர் இதனால் போட்டி சமநிலையில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

2002ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய ரசிகர்கள் சிலர் போத்தல்களை மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களை நோக்கி எறிந்த காரணத்தினால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. பின்னர் டக்வத் லுவிஸ் முறைப்படி இந்தியா போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *