தமிழக வீரர்கள் இருவர், தந்தையை இழந்து சாதித்த சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு.. டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது மூன்று விதமான போட்டிகளை நடாத்தி வருகிறது. டெஸ்ட் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போன்ற மூன்று விதமான போட்டிகள் கிரிக்கெட் உலகில் நடைபெற்று வருகின்ற நிலையில் இருபதுக்கு 20 போட்டிகள் அறிமுகமானதை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளை பார்க்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை குறைவடைந்து கொண்டே சென்றது. இதனை உணர்ந்த சர்வதேச கிரிக்கெட் பேரவை டெஸ்ட் போட்டிகளுக்கு உயிரூட்டும் வகையில் புதிதாக ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்ற ஒரு தொடரை அறிமுகம் செய்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் உடைய மாபெரும் இறுதிப் போட்டியானது வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்து லோட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றிருக்கிறது.

இவ்வாறான நிலையில் குறித்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் குழாம் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. மாபெரும் இறுதிப் போட்டியானது ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இங்கிலாந்தில் லோட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. விராத் கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சுழல் பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சர்துல் தாகூர், உமேஸ் யாதவ், மொஹமட் சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா போன்ற முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் தமிழக வீரரான நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பேக்கப் வீரர்களாக அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஆவேஸ் கான், அர்சான் நாக்வஸ்வல்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *