‘அட மடப்பயலே…’ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்ப்பதாக கூறி நம்ம பையன் கிட்ட 30 லட்சம் கொள்ளையடித்த கூட்டம் வசமாக சிக்கியது !!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவந்த 14வது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது கொ ரோ னா வை ரஸ் அச்சம் காரணமாக இடைநடுவில் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

தொடர் மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் வெளிவராத நிலையில், ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.சி.சி இருபதுக்கு 20 உலக கிண்ண தொடருக்கு முன்னர் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மும்பை, முலுண்ட் பகுதியைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தனது 18 வயது மகனை கர்நாடகா ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்த்துள்ளார். குறித்த இளைஞரும் வாரம் இருமுறை அங்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்போது புஷ்கர் திவாரி என்ற இளைஞருடன் நட்பு வைத்துள்ளார். மகாராஷ்டிரா அணியில் இடம் பிடிப்பது கடினம் என்பதால் பிற மாநில அணிகளில் சேர்ந்து விளையாடும்படி இளைஞருக்கு திவாரி ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள கொல்கத்தா அணிக்கு பந்துவீச்சாளர் தேவை என்றும் பணம் கொடுத்தால் அணியில் சேர்த்து விடுவதாகவும் இளைஞரிடம் திவாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை உண்மை என்று நம்பிய இளைஞரின் தந்தை 2 தவணைகளில் ரூ. 30 இலட்சம் (இந்திய ரூபாய்) பணத்தை விளையாட்டு நிறுவனம் ஒன்றின் உரிமையாளருக்கு வழங்கியுள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அவர், இளைஞரின் தந்தையின் தொலைப்பேசி அழைப்புகளை தவிர்த்தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இளைஞரின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *