இந்தியா டீம பாத்து கத்துக்கொங்கடா… நீங்க எல்லாம் வேஸ்ட்… – பாகிஸ்தான் அணிக்கு சொல்லிக்கொடுத்த அமீர்

விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக நிகழ்ந்த வீரர் தான் இடது கை பந்துவீச்சாளரான மொஹமட் அமீர். அவர் கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

அந்த வேளையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள இவர், இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இளம் வீரர்களுக்கு உள்ளூர் போட்டியில் அதிகளவில் வாய்ப்பு கொடுத்து திறமையை சுற்றுப்பயணங்கள் தீட்டுகிறது. ஆனால், பாகிஸ்தான் அணியில் நிலைமை அப்படியல்ல.

இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தபிறகுதான் நுணுக்கங்களைக் கற்க ஆரம்பிக்கிறார்கள். இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளைப் பாருங்கள், அவர்கள் இளம் வீரர்களை உள்ளூர் போட்டிகளிலிருந்தே தயார்படுத்துகிறார்கள். எப்படி விளையாட வேண்டும், அழுத்தங்களை எவ்வாறு சமாளிப்பது என்பதை உள்ளூர் கிரிக்கெட் தொடர்களின் போதே கற்றுக்கொடுக்கப்படுகிறது.

ஆனால், பாகிஸ்தானில் நிலைமை அப்படியல்ல. சர்வதேச கிரிக்கெட் உலகிற்குச் சென்ற பிறகுதான் இளம் வீரர்கள் நுணுக்கங்களை கற்றுக் கொள்கிறார்கள். இளம் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், க்ருனால் பாண்டியா, இஷான் கிஷன் போன்றவர்களைப் பாருங்கள். அவர்கள் உள்ளூர் தொடர்கள், ஐபிஎல் போன்றவற்றில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

இவர்கள் முதல் போட்டியிலிருந்தே அற்புதமாக விளையாடி வருகிறார்கள். காரணம், இவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் கற்றதுதான். பாகிஸ்தானும் இளம் வீரர்களைச் சரியாக வளர்த்தெடுக்க இந்தியா போன்ற அணிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *