ஐ.பி.எல் மீண்டும் நடைபெற்றால் இந்த நாட்டு வீரர்கள் ஒருவரும் விளையாட மாட்டார்கள். அந்நாட்டு கிரிக்கெட் சபை உறுதியாக கூறிவிட்டது

விளையாட்டு

2021ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரானது கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் கடந்த மே மாதம் 2ஆம் திகதி தொடர் இடைநடுவில் ஒத்திவைக்கப்பட்டது.

ஒரு சில வீரர்களுக்கு கொ ரோ னா வை ரஸ் தொ ற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாகவே குறித்த தொடர் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் மாதமளவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் மீதமுள்ள போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவதில் சந்தேகம் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் இயக்குனர் ஆஷ்லி ஜைல்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்இ ‘இங்கிலாந்து அணி பங்கேற்று விளையாடவுள்ள சர்வதேச போட்டிகளில் இந்த வீரர்களின் பங்கேற்பு நிச்சயம் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். திட்டமிட்டபடி சர்வதேச தொடர் நடைபெற்றால் அவர்கள் தேசிய அணிக்காக விளையாட வேண்டியிருக்கும்.

அதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்தான். சர்வதேச போட்டி அட்டவணையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றால் இங்கிலாந்து வீரர்கள் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவார்கள்.’ என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *