டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த இந்திய வீரரும் படைக்காத இந்த சாதனையை நான் படைக்கனும். – தீராத ஆசை வைத்துள்ள தமிழக வீரர் சுந்தர் பேட்டி

விளையாட்டு

விராட் கோலி,

தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஐசிசி உலக சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. குறித்த ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நிறைவடைந்ததன் பின்னர் இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் உடைய பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழக வீரரான தற்போது இந்திய அணியில் முக்கிய சகலதுறை வீரராக இடம்பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.

கடந்த வருட இறுதியில் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது டெஸ்ட் அறிமுகம் பெற்று கொண்ட தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 265 ஓட்டங்களை குவித்துள்ளார். இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடிய 21 வயது வீரர் என்ற சாதனையையும் அவர் ஒரு பக்கம் படைத்துள்ளார்.

இவ்வாறான நிலையில் தான் எதிர்காலத்தில் சாதிக்க போகின்ற விடயங்கள் தொடர்பில் நேர்காணல் ஒன்றின் போது கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் அ டிப்பது மட்டுமின்றி பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களில் யாரும் இதுவரை ஒரே டெஸ்டில் சதம் மற்றும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை என்பதனால் அந்த சாதனையை தான் படைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 10 விக்கெட் மற்றும் 100 ஓட்டங்களை அ டித்த வீரராக வெகு சிலரே உள்ளனர். அவர்களில் இயான் போத்தம்,, ஷாகிப் அல் ஹசன் மற்றும் இம்ரான் கான் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான தொடரின் போது 91 ஓட்டங்களை குவித்த வாஷிங்டன் சுந்தர் சதத்தை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *