‘ஒரே அசிங்கமா பேச்சு குமாரு..’ ‘இந்தியா டீம் ஒன்றும் சூ தாட்டம் செய்யவில்லை..’ விசாரணையில் ஐ.சி.சி அறிக்கை !!

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்,

போட்டிகள் போது சூ தாட்டம் நடைபெறுவதாகவும், கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி மற்றும் கடந்த 2017ஆம் ஆண்டு ரஞ்சியில் நடைபெற்ற இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி ஆகிய குறித்த இரு டெஸ்ட் போட்டிகளையும் பார்க்கும் போது, அதில் சூ தாட்டம் நடைபெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது எனவும், வெளிநாட்டு செய்தி தொலைக்காட்சி நிறுவமான அல்-ஜெஸீரா, கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சூ தாட்ட தரகர் ஒருவர், கிரிக்கெட்டில் சூ தாட்டம் எந்த வகையில் நடைபெறுகிறது என்பது தனக்கு தெரியும் என்றும் குற்றம் சாட்டினார். குறித்த சூ தாட்ட குற்றச்சாட்டு குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) தீவிர விசாரணை நடத்தியது.  இந்த விசாரணையின் முடிவில், இந்திய அணி மோதிய அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், சூ தாட்டம் நடைபெற்றதற்கான எந்தவித நம்பத்தகுந்த ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்தது.

இதனால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ், இந்த விடயத்தில் குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் சூ தாட்ட குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *