கோலி முதல் குசல் பெரேரா வரை. அதிக சம்பளம் பெறுகின்ற அனைத்து அணிகளின் கேப்டன்கள் பட்டியல்… கோலியை விடவும் அதிக சம்பளம் பெறும் ஜோ ரூட்.. எத்தனை கோடி தெரியுமா ?

விளையாட்டு

கிரிக்கெட் விளையாடுகின்ற ஒவ்வொரு வீரர்களுக்கும்,

அந்தந்த கிரிக்கெட் சபைகளினுடைய பொருளாதார வசதிக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கான சம்பளங்கள் வழங்கப்படுகிறது. ஒரு அணியில் விளையாடுகின்ற வீரர்களில் பொதுவாக அணித் தலைவர்களுக்குத் தான் அதிகளவிலான சம்பளங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட தரவின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அணித்தலைவராக செயற்பட்ட அதாவது டெஸ்ட் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போன்ற போட்டிகளுக்கான அணியின் தலைவராக செயற்பட்டு அதிக அளவில் சம்பளம் வாங்குகின்ற வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கிரிக்கெட் உலகிலேயே அதிக அளவிலான சம்பளத்தை வழங்குகின்ற கிரிக்கெட் சபையாக இந்திய கிரிக்கெட் சபை இருந்தும் கூட இங்கிலாந்து அணியின் தலைவரான ஜோ ரூட், விராட் கோலியை விட அதிக அளவிலான சம்பளம் பெற்று இருக்கின்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் சபையானது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட்டுக்கு 8.9 கோடி வருட சம்பளமாக வழங்குகிறது.

இரண்டாவதாகத் தான் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி காணப்படுகிறார். அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது 7 கோடி ரூபாய் சம்பளம் வழங்குகிறது. மூன்றாவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையானது, அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் உடைய தலைவர் டிம் பெய்ன் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 அணித்தலைவர் ஆரோன் பின்ச் ஆகிய இருவரும் வருடத்திற்கு 4.87 கோடி ரூபாய் சம்பளம் வழங்குகிறது.

இறுதியாக அண்மையில் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட குசால் பெரேரவுக்கு இலங்கை கிரிக்கெட் சபையானது வருடாந்த சம்பளம் 25 இலட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அவருக்குத்தான் அணித் தலைவர்களில் ஆகக்குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *