ஓப்பனராக களமிறங்கி இறுதி வரை போராடி இங்கிலாந்து அணியை தூக்கி நிறுத்திய ரோரி பார்ன்ஸ்…. பாஸ்ட் போலுக்கு காலை மடக்க அ டித்தான் பாரு ஒரு சிக்ஸர்.. வேற லெவல் சிக்ஸர் !

விளையாட்டு

சுற்றுலா நியூசிலாந்துக்கும்,

இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லோட்ஸ் கிரிக்கெட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 378 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பதிலுக்கு முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஆரம்பத்தில் கடுமையான பின்னடைவை சந்தித்தது. இருந்தாலும் தனி மனிதனாக இறுதி வரை போராடிய,

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோரி பேர்ன்ஸ் 297 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகள் உள்ளடங்களாக 132 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலு சேர்த்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் டிம் சவுத்தி 43 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், கைல் ஜமிசன் 85 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், நைல் வேக்னர் 83 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மீண்டும் தங்களது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்ற நியூசிலாந்து அணி போட்டியின் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்களை பெற்றது. இந்த போட்டியின் போது தனிமனிதனாக போராடிய இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரோரி பேர்ன்ஸ், வேகப்பந்துவீச்சுக்கு காலை மடக்கி லெக் திசையில் சிக்சர் அ டித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *