கொழும்பு கிங்ஸில் அ தி ர டி மாற்றம்.. வர்ணணையாளர் தலைமை பயிற்றுவிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் உப பயிற்றுவிப்பாளரானார் !

விளையாட்டு

லங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்குபற்றும் அணிகளில் ஒன்றான கொழும்பு கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பு குழாமில் அ தி ர டி மாற்றம் நிகழ்ந்துள்ளது. தலைமை பயிற்றுவிப்பாளராக பெயரிடப்பட்ட இங்கிலாந்து முன்னாள் வீரர் கபீர் அலி, கொ ரோ னா வை ர ஸ் தொ ற் று க் கு ள் ளா ன நிலையில் லங்கா பிரிமியர் லீக் தொடரிலிருந்து விலகினார்.

லங்கா பிரிமியர் லீக் தொடரின் வர்ணணையாளர்கள் பட்டியலில் ஒருவராக பெயரிடப்பட்ட தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஹேர்ஷல் கிப்ஸ் தற்போது கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு கிங்ஸ் அணியின் உப பயிற்றுவிப்பாளராக பெயரிடப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், த னி ப் ப ட் ட கா ர ண ங் க ள் கருதி தொடரிலிருந்து விலகினார்.

புதிய உப பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து அணிகள் பங்குபற்றும் குறித்த லங்கா பிரிமியர் லீக் தொடரானது எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 16ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


முதல் போட்டியில் அஞ்சலோ மெத்யூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் – குசல் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *