ஐ.சி.சி நடத்திய உலகக்கிண்ண தொடர்களின் இறுதிப்போட்டியில் அதிக தடவைகள் விளையாடிய இந்திய வீரர்களின் பட்டியல்

Uncategorized

இந்திய வீரர்கள்.

கிரிக்கெட் உலகை நிர்வகிக்கின்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையானது மூன்று விதமான தொடர்களை நடாத்தி வருகிறது. ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கு மாத்திரம் தான் ஐ.சி.சி உலக்கிண்ண தொடர்கள் காணப்பட்டது. ஆனால் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய வடிவில் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்ற வகையில் புதிய டெஸ்ட் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.சி.சி நடத்திய உலக்கிண்ண தொடர்களின் இறுதிப்போட்டியில் அதிக தடவைகள் விளையாடிய இந்திய வீரர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தலாம்.

1. யுவராஜ் சிங் – 7 முறை

யுவராஜ் சிங் இதுவரை ஏழு முறை ஐசிசி உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார். 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரையில், 2003ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், 2011 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார். அதேபோல டி20 உலக்கிண்ண தொடரில் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார்.


சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை பொறுத்தவரையில் 2000ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், 2002ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும், 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார்.

2. மகேந்திர சிங் தோனி – 5 முறை

மகேந்திர சிங் தோனி 2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார். டி20 உலகக்கிண்ண தொடரில் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும் இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார். அதேபோல சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார்.

3. விராட் கோலி – 5 முறை

விராட் கோலி ஒருநாள் உலக்கிண்ண தொடரில் 2011ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடினார். டி20 உலகக்கிண்ண தொடரில் 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2013ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 இறுதி போட்டியிலும் விளையாடினார்.

4. ரோஹித் சர்மா – 5 முறை

ரோஹித் சர்மா டி20 உலக கோப்பை தொடரில் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார். சம்பியன்ஸ் டிராபி தொடரில் 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார். தற்போது 2021ஆம் ஆண்டு டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் விளையாடியுள்ளார்.


5. சச்சின் டெண்டுல்கர் – 4 முறை

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் 2003ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், 2011ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார். சம்பியன்ஸ் டிராபி தொடரில் 2000ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், 2002ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராகவும் இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் டி20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

India’s Sachin Tendulkar achonolodge the crowd after he scored century against England in the World Cup one day match at Chinnaswamy stadium in Bangalore on Sunday. Photo Srikanta Sharma R.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *