‘எப்போது களமிறங்கி அ டித்து நொறுக்குவோம் என்று வீரர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.’ – இலங்கை அணி ரசிகர்களை கதிகலங்க வைத்த தவான் !!

Uncategorized

இலங்கை எதிர் இந்தியா…

ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 சர்வதேச தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை வந்தடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் எதிர்வருகின்ற 13ஆம் திகதி ஆரம்பமாகிறது.

ராகுல் டிராவிட்டின் பயிற்றுவிப்பில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அணியுடனான தொடருக்காக இலங்கை புறப்படுவதற்கு முன்னர் இந்திய அணியின் தலைவர் ஷிகர் தவான் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்,

‘இது மிகவும் சிறந்த அணி. எங்கள் அணிக்குள் நம்பிக்கையும், நேர்மறை எண்ணமும், சாதிக்கும் உத்வேகமும் இருக்கிறது. நன்றாக செயற்படுவோம் என்று ஒவ்வொருவரும் நம்புகிறார்கள். இது ஒரு புதிய சவால். அதே சமயம் களத்தில் எங்களது திறமையை வெளிப்படுத்த இது அருமையான வாய்ப்பு. 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் கழிந்து விட்டது.’

‘எனவே எப்போது களம் இறங்கி அ டித்து நொறுக்குவோம் என்று வீரர்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்த தொடருக்கு தயாராக எங்களுக்கு 10-12 நாட்கள் இருக்கிறது. இது அனுபவமும், இளமையும் கலந்த அணி. சாதுர்யமாக உழைத்துவரும் எங்களது வீரர்கள், போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.’ என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *