“பக்கத்து வீட்டு காரரின் மனைவி போன்றது தான் பேட்கள்.. தன்டய விட பக்கத்து வீட்டுக்காரி மேல தான் அதிக ஆசை வரும்” – வாயால் வினையை வாங்கிக்கட்டியுள்ள தமிழன் கார்த்திக் ! முழு தமிழர்களுக்கும் கேவலம்

Uncategorized

தினேஷ் கார்த்திக்…

இலங்கை அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது தொடரான ஒருநாள் சர்வதேச தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியின் வீரரும், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரருமான தினேஷ் கார்த்திக் கமெண்ட்ரியின் போது எதர்ச்சையாக பேசியது, இப்போது அதுவே அவருக்கு வினையாக மாறியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது கமெண்ட்ரியாக உருவெடுத்த தினேஷ் கார்த்திக், அப்போது அவர் சொன்ன கமெண்ட்ரி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக, வெளிநாட்டு வர்ணனையாளர்களுக்கு அவர் தரும் ஒன்லைன் பன்ச், ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இதனால் தினேஷ் கார்த்திக்கின் கமெண்ட்ரிக்காக ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.

அதன் படி தற்போது தினேஷ் கார்த்திக், இங்கிலாந்துக்கு எதிரான பெண்கள் அணி போட்டிக்கும், இப்போது இலங்கை தொடருக்கும் வர்ணனை செய்து வருகிறார். அதன் படி இங்கிலாந்து – இலங்கை இடையே நடந்த 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தினேஷ் கார்த்திக், கிரிக்கெட் வீரர்களின் பேட் குறித்து கூறினார்.

அதில், எந்த ஒரு பேட்ஸ்மெனுக்கும் தங்கள் வைத்திருக்கும் பேட்களை விட, அடுத்த வீரர் வைத்திருக்கும் பேட்களைத்தான் பெரிதும் விரும்புகிறார்கள். பேட்கள் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி போல, நம்மிடம் இருப்பதை விட அடுத்தவரிடம் இருப்பது தான் சிறப்பாக தெரியும்.

அது போன்று, தம்மிடம் உள்ள பேட்களை விட, அடுத்தவர்களிடம் உள்ள பேட்களைத் தான் பேட்ஸ்மேன்கள் விரும்புவார்கள் என்று வழக்கம் போல் ஒரு காமெடியாக பேசினார். ஆனால், இது சிலருக்கு பிடிக்கவில்லை. இதைக் கண்ட இணையவாசிகள் சிலர் தினேஷ் கார்த்திக்கின் இந்த பேச்சு சற்று எல்லை மீறிவிட்டது. பெண்கள் என்றால் அவ்வளவு இழிவா? உங்கள் வர்ணனை பிடிக்கும் என்பதற்காக அடுத்த வீட்டுக்கார்களின் மனைவியை எடுத்துக்காட்டாக கூறியதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறி வருகின்றனர்.

மேலும், தினேஷ் கார்த்திக்கின் இந்த வர்ணனை குறித்து, ஐசிசி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம், யாரேனும் புகார் அளித்தால், வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *