இரசிகர்கள், சக வீரர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து டுவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் தலைவர !

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக கடமையாற்றியவர்களில் ஒருவர் தான் வலது கை துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட வீரருமான தினேஷ் சண்டிமால் தனது நேற்று முன்தினம் தனது 31ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

பிறந்த நாளை மிக அழகாக கொண்டாடிய தினேஷ் சந்திமால் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

தனது அணி நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பிறந்தநாளை அவர் கொண்டாடினார். பிறந்த நாள் கேக்கை சண்டிமால் மீது நண்பர்கள் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பான புகைப்படத்தை அவர் டுவிட்டரில் வெளியிட்டு அந்த பதிவில், எனது அணி நன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி . வழக்கம் போல் என் முகத்தை மறக்கமுடியாததாக மாற்றினீர்கள்.

மேலும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இரசிகர்களுக்கு மிக்க நன்றி . நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *