ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐ.சி.சி உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய 10 வீரர்கள் ! எங்களுக்கே கொஞ்சம் ஆச்சரியமா இருக்கும்.

Uncategorized

ஐ.சி.சி உலகக்கிண்ணம்

கிரிக்கெட் விளையாடுகின்ற ஒவ்வொரு அணிகளின் கனவாக இருப்பது, நாம் ஒரு நாளில் ஐ.சி.சி உலகக்கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்பது தான். ஒரு அணி உலகக்கிண்ணத்தை கைப்பற்றுகிறது என்றால் அதற்கு அந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. ஒரு உலகக்கிண்ண தொடருக்காக 15 பேர் கொண்ட ஒரு அணியை தெரிவு செய்யும் போது மிகவும் திறமையான வீரர்களுக்கே அணியில் வாய்ப்பு கிடைக்கும். அப்படி அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டும் ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் உலகக்கோப்பை வென்ற வீரர்களும் உள்ளனர்.

உபுல் சந்தனா (1996)

1996ஆம் ஆண்டு இலங்கை அணியில் இருந்தார்.சுழற்பந்து பிரிவில் முத்தையா முரளிதரன் பிரமாதமாக பந்துவீசினார். அக்காரணத்தால் உபுல் சந்தனாவிற்கு ஒரு போட்டியில் கூட இடம் கிடைக்கவில்லை. ஆனால் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியில் ஒரு உறுப்பினராக இருந்த பெருமை உண்டு.

மிட்செல் ஜான்சன் (2007)

இந்தப் பட்டியலில் இவரது பெயர் இருப்பது நமக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். 2007ஆம் ஆண்டு மெக்கராத், டெய்ட் போன்ற பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தனர். பின்வரும் காலங்களில், தான் மிகச்சிறந்த பவுலர் என்பதை மிட்செல் ஜான்சன் நிரூபித்தார். அவுஸ்திரேலிய அணி 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெல்ல ஒரு முக்கிய அங்கமாக இவர் திகழ்ந்தார்.

சுனில் வால்சன் (1983)

1983ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக உலகக்கோப்பை வென்றது. ஆனால் சுனில் வால்சனிற்கு அந்த வெற்றி அவ்வளவு திருப்தியைத் தரவில்லை. ஏனென்றால் இவரைத் தவிர இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் குறைந்தது ஒரு போட்டியிலாவது பங்கேற்றனர். வால்சன் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை என்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.

டாம் கர்ரன் (2019)

2019ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியில் இருந்தார். வளர்ந்து வரும் நட்சத்திரமாக டாம் கர்ரன் கருதப்பட்டார். முன் அனுபவம் இல்லாத காரணத்தால் இவரை பிளேயிங் 11இல் சேர்க்கவில்லை. இங்கிலாந்து அணி எப்போதும் ஜோப்ரா ஆர்ச்சரின் மின்னல் வேகத்தை மட்டுமே நம்பினர். அவரும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நம்பிக்கைக்கேற்ப சூப்பர் ஓவரில் வெற்றியைத் தேடித் தந்தார்.

நாதன் பிரெக்கன் (2003)

2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் ஜேசன் கில்லெப்சே உபாதை காரணமாக, தொடரின் மத்தியிலேயே விலகினார். அவருக்குப் பதிலாக மாற்று வீரராக நாதன் பிரெக்கன் அணியில் சேர்க்கப்பட்டார். என்னதான் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்தாலும் இவரால் ஒரு போட்டியில் கூட பங்கேற்க இயலவில்லை. 

நாதன் ஹெளரிட்ஸ் (2003)

ஷேன் வார்னே, கிரிக்கெட் விதிகளுக்கு மீறிய மருந்துகளை உபயோகப்படுத்தியதால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இவரை அணியில் இருந்து நீக்கியது. மாற்று வீரராக நாதன் ஹெளரிட்ஸ் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாதன் பிரெக்கனைப் போல இவரும் தொடரின் மத்திலேயே அணியில் இணைந்தார். இவரைப் பிளேயிங் 11இல் சேர்க்காமலயே 2003ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை முத்தமிட்டது.

காலிஸ் கிங் (1975)

1975ஆம் வருடம் முதல் ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் நடைபெற்றது. மேற்கிந்திய தீவுகள் அந்த வருடம் உலகக்கோப்பையைத் தட்டி சென்றது. அந்த அணியில் காலிஸ் கிங் இடம் பெற்று இருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணி 5 போட்டிகளில் விளையாடியது.அதில் ஒன்றில் கூட காலிஸ் கிங் பங்கேற்கவில்லை. 1979ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரில் கிங்கிற்கு வாய்ப்புக் கிடைத்தது. 

பிராட் ஹாடின் (2007)

2007ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் பிராட் ஹாடினும் இடம் பெற்றிருந்தார். அந்த வருடம் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக கில்கிறிஸ்ட் அற்புதமாக செயல்பட்டார். அதனால் ஹாடினிற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2007ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை வென்றது.

மர்வன் அத்தப்பத்து (1996)

இலங்கை வீரரான இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தும் சர்வதேச அணிக்காக 13,000 ரன்கள் அ டித்துள்ளார். 1990ஆம் ஆண்டே இவர் இலங்கை அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து சிறப்பாக விளையாடாத காரணத்தினால் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். 1996 ஆண்டு தேசிய அணியில் மீண்டும் இடம்பிடித்தார்.

லியாம் டாவ்சன் (2019)

சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி விறுவிறுப்பான சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று முதல் முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றனர். இங்கிலாந்து அணி 2019ஆம் ஆண்டு கோப்பையை உயரத்த லியாம் டாவ்சன் எதுவும் பங்களிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *