கோஹ்லிப் படைக்கு ஐ.சி.சி வெ ச் ச ஆ ப் பு.. அதிக வெற்றிகளை குவித்தும் இரண்டாமிடத்திற்கு பின்னடைவு.. இலங்கைக்கும் ஆ ப் பு.. முழு தரவரிசை உள்ளே

விளையாட்டு

ஐ.சி.சி புதிதாக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு அணியினை தெரிவு செய்வதற்காக கணக்கீட்டு முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதையடுத்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை ஐ.சி.சி நடாத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் வெற்றி, சமநிலைக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதில் இந்திய அணி 4 தொடரில் பங்கேற்று 7 வெற்றி, 2 தோல்வி பெற்று 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது. அவுஸ்திரேலியா 7 வெற்றி, 2 தோல்வி, ஒரு சமநிலையுடன் 296 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருந்தது.

இந்த நிலையில் புள்ளிகள் பட்டியலில் கணக்கீட்டு முறையை ஐ.சி.சி. மாற்றியுள்ளது. சதவீத அடிப்படையில் அணிகளை வரிசைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் இந்திய அணி 75 சதவீதத்துடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. முதல் இடத்தை அவுஸ்திரேலியா 82.22 சதவீதத்துடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

3-வது இடத்தில் இங்கிலாந்தும் (60.83 சதவீதம்), 4-வது இடத்தில் நியூசிலாந்து (50 சதவிதம்) உள்ளன. ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தானும், ஆறாமிடத்தில் இலங்கையும் உள்ளன.

அனில் கும்ப்ளே தலைமையிலான ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் பரிந்துரையை ஏற்று உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் கணக்கீட்டில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *