ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை அறிவிக்கு இறுதி திகதியை அறிவித்த ஐ.சி.சி.. இந்திய அணி எப்போது வெளியாகும் தெரியுமா ?

விளையாட்டு

இருபதுக்கு 20 போட்டிகள் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் பேரவையானது கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி இருபது-20 உலக கிண்ணத் தொடரை நடத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரையில் ஆறு இருபதுக்கு இருபது சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 7வது 20 டி20 சர்வதேச கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ளது.

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 7வது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரானது அடுத்த மாதம் 17ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் ஆகிய இரு நாடுகளில் ஆரம்பமாகிறது.

குறித்த உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வருகிற 10ஆம் திகதிக்குள் ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்களை அறிவிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை காலக்கேடு விதித்துள்ளது.

இந்நிலையில் ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4வது டெஸ்ட் போட்டி த ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமான நிலையில், இந்த போட்டி முடிவடைந்தவுடன் தேர்வு குழுவினர் கூடி உலகக்கிண்ண தொடருக்கான அணியை தேர்வு செய்யவுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *