எங்கள் வீரர்கள் வெ றித்தனமாக உள்ளார்கள்.. அடுத்த போட்டியில் அதே வெறியோடு அ டித்து நொருக்குவோம் – நெஞ்சை நிமிர்த்தி பேசிய சிங்கங்களின் தலைவன்

விளையாட்டு

தொடரை வென்ற தென்னாபிரிக்கா…

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் சர்வதேச தொடரை இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய நிலையில் இருபதுக்கு இருபது சர்வதேச தொடரை பதிலுக்கு தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. இருபதுக்கு இருபது சர்வதேச தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டி நேற்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து சுருண்டு போனது. 104 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 14.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்த நிலையில் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.

இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இருபதுக்கு-20 சர்வதேச தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை தன்வசப்படுத்தி உள்ளது. இந்த தொடரில் இலங்கை அணி தோல்வியை தழுவியமை எல்லோரையும் அதிர் ச்சிக்குள்ளாக்கியது. ஒருநாள் தொடரில் சிறப்பான முறையில் விளையாடி மற்றும் பந்துவீசி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி,

இருபதுக்கு 20 தொடரைக் கைப்பற்றும் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மிக மோ சமான முறையில் துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்தியது மாத்திரமல்லாமல், பந்து வீச்சாளர்களும் உரிய முறையில் சிறப்பாக பந்து வீசவில்லை.

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் இன்னும் ஒரு மாதத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில் இலங்கை அணி இவ்வாறு மோசமாக அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை தழுவியுள்ளமை ரசிகர்களிடத்தில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே மூன்றாவது போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்த போட்டியின் பின்னர் இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க தெரிவிக்கையில், டி20 தொடரை இழந்தது வருத்தமாக இருக்கிறது தான். எனினும் அடுத்து உள்ள போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்று ஆறுதல் வெற்றியை பெறுவதில் நாம் ஆர்வமாக உள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *