இதை கவனித்தீர்களா.? சவுத் ஆபிரிக்காவின் வெற்றிக்கு 3 ரன்களே தேவை.. தோல்வி நிச்சயம் என்ற நேரத்திலும், உரிய இடத்தில் பீல்டர்களை ஒழுங்குபடுத்தி தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்த சானக்க

விளையாட்டு

தலைவன் தசுன் சானக்க….

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் சர்வதேச தொடரை இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய நிலையில் இருபதுக்கு இருபது சர்வதேச தொடரை பதிலுக்கு தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. இருபதுக்கு இருபது சர்வதேச தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டி நேற்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து சுருண்டு போனது. 104 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 14.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்த நிலையில் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.

இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இருபதுக்கு-20 சர்வதேச தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை தன்வசப்படுத்தி உள்ளது. இந்த தொடரில் இலங்கை அணி தோல்வியை தழுவியமை எல்லோரையும் அதிர் ச்சிக்குள்ளாக்கியது. ஒருநாள் தொடரில் சிறப்பான முறையில் விளையாடி மற்றும் பந்துவீசி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி,

இருபதுக்கு 20 தொடரைக் கைப்பற்றும் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரு துறைகளிலும் இலங்கை வீரர்கள் சொதப்பியதன் காரணமாக அவர்கள் போட்டியில் தோல்வியை தழுனர். இந்நிலையில் தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்காக 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இந்ந நிலையில் இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளரான இளம் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு பந்துவீச சந்தர்ப்பம் வழங்கி அதற்கு ஏற்ற வகையில் பீல்டர்களை ஒழுங்குபடுத்தினார். இந்த சம்பவம் ஒரு சிறந்த தலைவர் என்பதை நிரூபித்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *