கமாண்டேட்டர் என்றாலும் வாய் அளவோட இருக்கனும். தமிழன் தினேஷ் கார்த்திக்கின் நாற வாயால் பறிபோகும் இந்தியாவின் டெஸ்ட் வெற்றி… ஓவர் ஆக்ட் பண்ணினா கடைசில இப்டி தான் நடக்கும்

விளையாட்டு

விராட் கோலி தலைமையிலான இந்தியா கிரிக்கெட் அணிக்கும், ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி ஆரம்பிக்க முன்பு பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொ ரோ னா உறுதியானது. இதனால், அவர் தனிமை முகாமிற்கு சென்றால். வீரர்கள் யாருக்கும் கொ ரோ னா உறுதிசெய்யப்படவில்லை. அடுத்து 5ஆவது டெஸ்ட் ஆரம்பிக்க முன்தினம், இந்திய அணி பிசியோவுக்கு கொ ரோ னா உறுதியானதால் வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், 5ஆவது டெஸ்ட் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐசிசி க்கு திடீரென்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், 5ஆவது டெஸ்ட் போட்டியின் வெற்றியாளர் யார் என்பது குறித்து நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். அதற்கான விசார ணையை விரைவில் தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 5ஆவது டெஸ்ட் போட்டி குறித்து ஐசிசி விசா ரணை நடத்தினால், இரண்டு விதமான தீர்ப்பு மட்டுமே வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது. ஒன்று, கொ ரோ னா காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டால் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது. இதனால், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியதாக அறிவிக்கப்படும்.

ஒருவேளை இப்போட்டியை கொ ரோ னா காரணத்திற்குள் கொண்டு வராமல், இந்திய அணி தானாக முன்வந்து போட்டியில் இருந்து விலகியதாக எடுத்துக்கொள்ளப்படும் பட்சத்தில், 5ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணியை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, தொடர் 2-2 என சமநிலையில் முடிவடையும்.

5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்துப் பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி, ‘கொ ரோ னா காரணமாக போட்டி ரத்துசெய்யப்படவில்லை. இந்திய வீரர்களின் மனநிலை மற்றும் அணிக்குள் இருக்கும் பிரச்சினை காரணமாகத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது. எனவே, இங்கிலாந்தை வெற்றியாளராக அறிவித்து, புள்ளிகளைத் தரவேண்டும்’ எனத் தெரிவித்தார்.

5ஆவது போட்டி ரத்தான பிறகு பேட்டிகொடுத்த தினேஷ் கார்த்திக், ‘இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் தூங்கவே இல்லை. அன்று இரவு பல வீரர்களுடன் பேசினேன். அவர்கள் போட்டிக்குத் தயாராக இருக்கவில்லை. கொ ரோ னா குறித்த அச்சம் இருந்தது. சிலர் பதற்றத்துடன் காணப்பட்டனர். மனரீதியாக அவர்கள், போட்டிக்குத் தயாராக இல்லை என்பது தெரிந்தது. 

அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது குறித்து யோசித்துக்கொண்டு பலர் அதிகாலை மூன்று மணிவரை தூங்கவே இல்லை. இறுதியில், போட்டி ரத்து என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு மிகச்சரியானது. ரசிகர்களுக்கு இதுவேண்டுமானால் வருத்தமான விஷயமாக இருக்கலாம். ஆனால், பிரச்சினையைச் சமாளிக்க இது ஒன்றுதான் சரியாக முடிவு’ எனத் தெரிவித்திருந்தார்.

இதன்மூலம், இந்திய வீரர்கள் கொ ரோனா பயத்தால், இரவு தூங்காமல் மன உளைச் சலில் இருந்தது தெரிய வருகிறது. இதனை அடிப்படையாக வைத்துகூட, 5ஆவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *