கேப்டன் பதவியில் இருந்து தானாகவே விலகும் கோலி.. அவர் வயால் அவரே புதிய கேப்டனை அறிவிக்கிறார். – வெளியான திடீர் அறிவிப்பால் ஷாக்ஆனா கிரிக்கெட் உலகம் (புதிய கேப்டன் ரோஹிட்)

Uncategorized

விராட் கோலி – ரோஹிட் சர்மா…

இந்திய கிரிக்கெட் அணியின் மூவகையான போட்டிகளுக்கும் அணியின் தலைவராக செயற்பட்டுவரும் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விராட் கோலி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தாலும், அவரால் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்ற குறை மட்டுமே இருக்கிறது. அது தவிர மற்றபடி கோலியின் கேப்டன்ஷிப்பில் எந்த ஒரு குறையும் இல்லை. 

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் சதம் அ டிக்காமல் விளையாடி வருவது ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சதம டித்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரிலும் அவர் சதம் அ டிக்காமல் ஏமாற்றினார். இந்நிலையில் அடுத்ததாக நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. 

அதிலும் விராட் கோலியே கேப்டனாக செயல்படுகிறார். நிச்சயம் இந்த முறை டி20 உலகக் கோப்பையை வென்று தன் மீது உள்ள குறையை போக்கிக்கொள்ள விராட் கோலி முயற்சிப்பார். அதேசமயம் டி20 உலகக் கோப்பை முடிந்து அடுத்து நடைபெற உள்ள தொடர்களில் இந்திய அணியில் கேப்டன் மாற்றம் இருக்கும் என்றும் அதை கோலியே அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

 

அதன்படி வெளியான தகவலில் விராட் கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக அவரது கேப்டன்ஷிப்பை விடப் போகிறார் என்றும் மேலும் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிகிறது. அந்த அறிவிப்பையும் விராட் கோலியே வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 

பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக விராட் கோலி தனது பதவியில் இருந்து இறங்கி வர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரோகித் சர்மா ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணியை 5 முறை கோப்பையை வெல்ல வைத்துள்ளதால் அவரை கேப்டனாக நியமிக்க நிர்வாகமும் ஒத்துழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் கேப்டனாக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து கோலி கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *