‘இந்திய டெஸ்ட் டீமிலும் இவரையே வைஸ் கேப்டனாக ஆக்குங்கள்’ ரஹானேவின் பதவிக்கு வேட்டுவைக்கும் இயான் சேப்பல் (இது நல்ல கருத்தா.?)

விளையாட்டு

இயான் சேப்பல்…

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இங்கிலாந்துக்கு இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் ஐந்தாவதும், இறுதியுமான போட்டி கொ ரோனா வைர ஸ் தா க்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது. 

இந்திய அணியின் வெற்றி குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இயன் செப்பல் தெரிவிக்கையில், டெஸ்ட் போட்டிகளுக்கும் இவரை வைஸ் கெப்டன் ஆக்குங்கள் என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி தற்போது மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. அவர்கள் ஒரு சரியான அணியாகவே களமிறங்கி வருவதால் இது போன்ற வெற்றிகளை குவிக்க முடிகிறது. அவுஸ்திரேலிய தொடரில் தொடங்கி அடுத்ததாக இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து தொடர், தற்போதைய இங்கிலாந்து தொடர் என அசைக்க முடியாத அணியாக இந்திய அணி திகழ்ந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டு வரும் விராட் கோலி தலைமையிலான அணி இனியும் நிச்சயம் வெற்றிகளை குவிக்கும். இந்திய அணியில் அஷ்வின் மற்றும் பாண்டியா ஆகியோரை இணைத்தால் இன்னும் அணியின் வலிமை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். 

அதுமட்டுமின்றி ரகானே-வின் இடம் கடினம் தான் என்றும் அவருக்கு பதிலாக துணை கேப்டன் பதவியை ரோஹித் சர்மாவிடம் கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளார். ரோகித் சர்மா அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் துணை கேப்டனாக செயல்படுவதில் திறமையானவர் என்றும் அதற்கான தகுதி அவரிடம் உள்ளது என்றும் இயான் சேப்பல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *