ஆர்.சி.பி யின் அந்த மனசு தான் கடவுள்…. டீமுக்கு சப்போர்ட் பண்ணாதவங்களக் கூட, சப்போர்ட் பண்ற லெவலுக்கு கொண்டுவந்த ஆர்.சி.பி.. லைக் செய்து வாழ்த்துங்கள் !!

விளையாட்டு

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர்…

2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் எதிர்வருகின்ற 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்கள10ர் அணி புதிய மாற்றத்துடன் களமிறங்க காத்திருக்கிறது. அந்த வகையில் வழமையாக சிவப்பு நிற ஜேர்சியுடன் களமிறங்கும் பெங்களுர் அணி, நீல ஜேர்சியுடன் களமிறங்க காத்திருக்கிறது.

2021ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டத்தின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. அதன் பின் பெங்களூரு அணி வரும் 20-ஆம் திகதி கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வழக்கமாக அணியும் சிவப்பு நிற ஜெர்சியுடன் விளையாடாமல், நீல நிறம் கொண்ட புதிய ஜெர்சியுடன் களமிறங்குகிறது.

ஏனெனில், இந்த போட்டியின் மூலம் கிடைக்கு வருவாயை, கொ ரோ னாவிற்கு எதிராக முன்நின்று போராடி வரும், மருத்துவ ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு கொடுப்பதற்காக என்று குறிப்பிட்டுள்ளது. இதை ஐபிஎல் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *