யார்க்கர் கிங் மாலிங்கவை நம்பவைத்து ஏமாற்றிய இலங்கை கிரிக்கெட்… வே தனையை தாங்க முடியாமல் மாலிங்க எடுத்த திடீர் முடிவு – முழமையான செய்தி உள்ளே

விளையாட்டு

லசித் மாலிங்க…

கிரிக்கெட் உலகில் யோர்கர் என்ற பந்துவீச்சை கண்ணுக்கு கொண்டுவந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தான் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க. அவர் கடந்த 2004ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமானதில் இருந்து இலங்கை அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளதுடன், பல சாதனைகளுக்கும் சொந்தக்காரராக மாறியிருக்கிறார்.

ஐ.பி.எல் தொடரில் அன்றிலிருந்து, இறுதிவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய லசித் மாலிங்க இறுதிவரை அந்த அணியில் ஒரு சாதனையாளராகவே மாறியிருந்தார். கடந்த சில ஆண்டுக்காக அதிக உடற்பருமன் பிரச்சினை காரணமாக காரணமாக இலங்கை அணியில் லசித் மாலிங்கவின் இடம் கேள்விக்குறியானது.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு செய்தியினை அறிவித்தார். அதன் பின்னர் இலங்கை அணியில் மீண்டும் லசித் மாலிங்க களமிறங்கி விளையாடுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். லசித் மாலிங்கவும் தான் மீண்டும் இலங்கை அணியில் விளையாட தயாராக இருந்தார்.

அதன் படி இந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் லசித் மாலிங்கவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இலங்கை அணியின் உலகக்கிண்ண குழாம் அறிவிக்கப்பட்டது. இதில் மாலிங்கவுக்கு இடமே கிடைக்கவில்லை.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இவர் தனது ஓய்வு அறிவிப்பை வீடியோ வாயிலாக அறிவித்தார். லசித் மாலிங்கவின் ஓய்வு கிரிக்கெட் உலகுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *