2012 டிசம்பர் 12 | அவுஸ்திரேலிய மண்ணில் 7 ரன்களுக்கு 6 விக்கெட்களை தெறிக்கவிட்ட மாலிங்க – பக்கா மாஸ் வீடியோ

விளையாட்டு

யோர்க்கர் கிங் லசித் மாலிங்க…

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான லசித் மாலிங்க முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த நிலையில் தற்போது அனைத்து விதமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். இந்நிலையில் மாலிங்கவின் சிறப்பு விக்கெட் வீடியோ ஒன்று உங்களுக்காக கீழே தரப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு இன்று உலகின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் பரந்து விரிந்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகில் காணப்படும் இரசிகர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ண முடியாது. அந்த அளவிற்கு இரசிகர்கள் பட்டாளம் குவிந்துள்ளது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பார்த்து இரசிக்கும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் மாறியுள்ளது.

ஒவ்வொரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் டி20 லீக் போட்டிகள் கிரிக்கெட் போட்டிகளை இன்னும் மெருகூட்டுகிறது. கிரிக்கெட் உலகில் நடைபெறும் லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளுக்கு அதிக இரசிகர்கள் காணப்படுகின்றனர்.

அதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் பிக்பாஷ் லீக் போட்டிகளுக்கு தான் இரண்டாவது அதிக இரசிகர்கள் பட்டாளம் காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுவரும் பிக்பாஷ் டி20 லீக் தொடரில் கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து;வீச்சாளர் லசித் மாலிங்க மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினார். 2012 டிசம்பர் 12ஆம் திகதி நடைபெற்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் – பேர்த் ஸ்கோச்சர்ஸ் அணிகளுக்கிடையிலான லீக் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய லசித் மாலிங்க 4 ஓவர்கள் பந்துவீசி 1 மெய்டன் ஓவருடன் 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மாலிங்க வீழ்த்திய விக்கெட்களை வீடியோவில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *