“நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. என்னால் 24 பந்துவீச முடியும், ஆனா ஓட முடியாது.. 37 வயதில் அடுத்தடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தும் போது யாரும் என்னுடைய வயிற்றை பற்றி பேசவில்லை” – 3 மாசத்துக்கு முன்ன மாலிங்க சொன்ன அந்த வார்த்தைகள்

விளையாட்டு

லசித் மாலிங்க…

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லசித் மாலிங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மாலிங்கவின் ஓய்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் லசித் மாலிங்க இந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் திகதி தெரிவித்த ஒரு கருத்து தொடர்பில் நாம் அன்று செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியை மீண்டும் உங்களுக்காக தருகிறோம்.

2021.06.14
வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லசித் மாலிங்கவும் முக்கியமான ஒரு வீரராவார். இலங்கை அணிக்கு பல போட்டிகளில் வெற்றியை தனிமனிதனாக பெற்றுக்கொடுத்த, லசித் மாலிங்க பந்து வீச்சிலும் மிக அபாரமான முறையில் யார்க்கர் பந்துகளை வீசி, எதிரணி வீரர்களை தி ணறடிக்க செய்வார். லசித் மாலிங்கவின் உடைய பந்துவீச்சில் ஆட்டமிழக்காத வீரர்கள் யாராகவும் இருக்க முடியாது.

இலங்கை கிரிக்கெட் டி20 அணியின் தலைவராக செயற்பட்டு வந்த லசித் மாலிங்க அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாக அறிவித்திருந்தார். அதாவது இருபதுக்கு இருபது போட்டிகளில் தவிர்ந்த ஏனைய இரண்டு போட்டிகளில் ஓய்வு பெற்றதாக அறிவித்த போதும், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு டி20 அணியிலும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் நேற்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரசல் ஆர்னோல்ட் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த லசித் மாலிங்க, இலங்கை கிரிக்கெட் சபையின் ஆனால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற இரண்டு கிலோமீட்டர் உடற்தகுதி பரிசோதனை தொடர்பில் கடுமையாக விளாசியுள்ளார்.

மேலும் தன்னுடைய உடற்தகுதி தொடர்பில் கேவலமாக பேசுபவருக்கு சிறப்பான பதிலடியை கொடுத்துள்ளார். அவர் தெரிவித்துள்ள விடயமாவது, இரண்டு கிலோமீட்டர் தூரத்தை என்னால் ஓட முடியாது. ஆனால் என்னால் இருபதுக்கு இருபது போட்டிகளில் 4 ஓவர்கள் அதாவது 24 பந்துகளை வீச முடியும் என தெரிவித்தார்.

அன்றொருநாள் நான் நியூசிலாந்து அணிக்கு எதிராக 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்துகின்ற போது யாரும் என்னுடைய வயிற்றை பற்றியோ, என்னுடைய உடல் தகுதியை பற்றியோ பேசவில்லை. எல்லோருமே பாராட்டினார்கள். அப்படித்தான் ஒரு திறமையை வெளிப்படுத்தும் போது பாராட்டுவார்கள். அந்த நேரத்தில் என்னுடைய வயது 37 ஆகிறது.

எந்த ஒரு வீரரும் என்னுடைய வயதை பற்றி பேசுவதே கிடையாது. மேலும் நான் இன்னும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாலிங்க தெரிவித்த முழுமையான வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *