கறுத்த இலங்கை அணியினரை வெள்ளையடிப்பு செய்த ஆபிரிக்க குதிரைகள்… தொடர் தோல்வியால் கேள்விக்குறியான இலங்கையில் டி20 சம்பியன் வாய்ப்பு

விளையாட்டு

தென்னாபிரிக்க அணிக்கு தொடர் வெற்றி…

இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையில் நடைபெற்ற 3வது டி20 சர்வதேசப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி இலங்கை அணியை சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடிப்பு செய்து இருக்கிறது. இலங்கை அணிக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு இடையிலான 3வது டி20 சர்வதேசப் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முழுமையாக துடுப்பெடுத்தாடி 8 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களை குவித்தது. தென் ஆபிரிக்க அணியை பொறுத்தவரையில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட 120 ஓட்டங்கள் என்ற எண்ணிக்கையானது மிக குறைவான ஓட்ட எண்ணிக்கை ஆகவே காணப்பட்டது.

எனவே மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 14.4 ஓவர்கள் நிறைவில் எந்த ஒரு விக்கெட்களையும் இழக்காமல் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிக் கொண்டது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி தொடரை 3-0 என்ற அடிப்படையில் எதிரணியின் சொந்த மண்ணில் இலங்கை அணியை சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடிப்பு செய்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கிண்ண தொடரானது அடுத்த மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணி இவ்வாறு மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியமை, இலங்கை அணி டி20 உலக கிண்ணத்தை கைப்பற்றுமா என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *