மர ண மாஸ் ஏ.பி.டி… 4 மாதங்கள் பயிற்சியே இல்லை. ஆர்.சி.பி யின் முதல் போட்டியில் மைதானத்தில் உருண்டு, புரண்டு சதம் விளாசிய ஏ.பி.டி

விளையாட்டு

ஏ.பி. டி வில்லியர்ஸ்…

கிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற இருபதுக்கு 20 லீக் தொடர்களில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடர் தான் மிகவும் பிரபலமான தொடராக காணப்படுவதுடன் அதிகளவிலான ரசிகர்களை கொண்ட தொடராகவும் அமைந்திருக்கிறது. 2008ஆம் ஆண்டிலிருந்து இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் இதுவரையில் 13 தொடர்கள் நிறைவு பெற்றுள்ளன.

அதிக தடவைகள் சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணியாக ரோகிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி காணப்படுகிறது. இந்நிலையில் 14வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ஆரம்பமானது. அரைவாசி போட்டிகள் நடைபெற்ற நிலையில் கொ ரோனா வை ர ஸ் தொற்று காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் எஞ்சிய போட்டிகள் எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் ஆரம்பமாகிறது. குறித்த தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் தற்போது ஐக்கிய அரபு ராஜ்ஜியம் சென்றுள்ள நிலையில் பயிற்சிகளில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியானது நேற்றைய தினம் பயிற்சி போட்டியில் விளையாடியது.

இந்த பயிற்சி போட்டியில் அந்த அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஏ.பி டி விலியர்ஸ் 46 பந்துகளில் சதம் கடந்து விளாசினார். தேவ்டுட் படிக்கள் தலைமையிலான ஆர்.சி.பி பி அணிக்கும், ஹர்சல் பட்டேல் தலைமையிலான ஆர்.சி.பி ஏ அணிக்கும் இடையிலான இந்த போட்டியின் போது ஏபி டி வில்லியர்ஸ் 46 பந்துகளில் மொத்தமாக 104 ஓட்டங்களை கடந்தார்.

கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஏ.பி. டி வில்லியர்ஸ் தனது முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தியிருந்தார். எனவே அவரின் அதிரடியான துடுப்பாட்டத்தை ஐபிஎல் போட்டிகளில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *