‘தோல்விக்கு நான் மட்டும் காரணமில்லை.. ஆடுகளத்த அவங்களுக்கு சாதகமா மாத்திட்டாங்க.. மழை, ஈரலிப்பு தன்மை காணப்பட்டதால் தோல்வி கிடைத்தது..’ ஏதும் தடைகள் வராவிட்டால் இலங்கை 3-0 என வெற்றி. – தோல்வியின் பின்னர் வெளிப்படையாக பேசிய கேப்டன் சானக்க

விளையாட்டு

தசுன் சானக்க…

இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையில் நடைபெற்ற 3வது டி20 சர்வதேசப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி இலங்கை அணியை சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடிப்பு செய்து இருக்கிறது. இலங்கை அணிக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு இடையிலான 3வது டி20 சர்வதேசப் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முழுமையாக துடுப்பெடுத்தாடி 8 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களை குவித்தது. தென் ஆபிரிக்க அணியை பொறுத்தவரையில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட 120 ஓட்டங்கள் என்ற எண்ணிக்கையானது மிக குறைவான ஓட்ட எண்ணிக்கை ஆகவே காணப்பட்டது.

எனவே மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 14.4 ஓவர்கள் நிறைவில் எந்த ஒரு விக்கெட்களையும் இழக்காமல் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிக் கொண்டது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி தொடரை 3-0 என்ற அடிப்படையில் எதிரணியின் சொந்த மண்ணில் இலங்கை அணியை சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடிப்பு செய்துள்ளது.

போட்டியின் தோல்வியின் பின்னர் இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க இவ்வாறு கருத்து தெரிவித்தார், ‘டி20 போட்டிகளை பொருத்தவரை, 12வது ஓவரிலிருந்து 20வது ஓவர்வரை துடுப்பெடுத்தாடுவதற்ககான பணி எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது போட்டியில் அந்த வாய்ப்பு இருந்தது. எனினும், சிறந்த பந்து ஒன்றுக்கு ஆட்டமிழந்தேன். நான் மாத்திரமல்ல. ஒவ்வொரு துடுப்பாட்ட வீரருக்கும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்தால், மாத்திரமே அவர்களுடைய பணிகளை சரியாக செய்யமுடியும்.

முதல் ஆறு ஓவர்கள், அடுத்து 10 ஓவர்கள் மற்றும் 10 ஓவர்களிலிருந்து 15 ஓவர்கள் என அணிக்காக திட்டங்கள் உள்ளன. ஆனால், இந்த திட்டங்கள் சரியாக செயற்படுத்தப்படவில்லை. எனினும், இந்த தவ றுகளை திருத்திக்கொள்வதற்கு முடியாமல் இல்லை. அதற்கான சரியான வீரர்களும் எம்மிடம் உள்ளனர். எனவே, உலகக்கிண்ணத்துக்கு செல்வதற்கு முதல், இந்த த வறுகளை திருத்திக்கொள்வது அவசியமாகும்’ என குறிப்பிட்டார்.

துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை குவிப்பதில் க டினமாக உணர்ந்தனர். ஓட்டங்களை குவிக்க தடுமாறும் விடயம் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்றது. நாம் டி20 போட்டிகளில் 180 ஓட்டங்களை பெற்று, நீண்ட நாட்களாகிவிட்டது. எனவே, இந்த தொடரை, சிறந்த ஆடுகளம் ஒன்றில் விளையாடியிருந்தால், இதனைவிட நல்ல விடயங்களை செய்திருக்க முடியும் என நம்புகிறேன்’

இதேவேளை, இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அதிகமாக பௌண்டரிகளை பெறுவதற்கு முயற்சிப்பதாக தோன்றியது. ஒவ்வொரு பந்துகளுக்கும் ஒவ்வொரு ஓட்டத்தை பெறுவதற்கான முயற்சிகளை வீரர்கள் மேற்கொள்ளவில்லை என்ற கு ற்றச்சாட்டும் எழுந்திருந்தது. ‘ஒவ்வொரு ஓட்டங்களை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கவில்லை. தென்னாபிரிக்க அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடியது.

மைதானத்தில் மழை மற்றும் ஈரப்பதன் இருந்ததால், எமது பந்துவீச்சாளர்களுக்கு இலகுவாக பந்துவீசமுடியவில்லை. டி20 போட்டியாக இருந்தாலும், சிறந்த பந்துக்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும். இலகுவான ஆட்டமிழப்புகளை எதிரணிக்கு வழங்கியதன் காரணமாகவே, எம்மால், ஒவ்வொரு ஓட்டங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை’ என தசுன் ஷானக சுட்டிக்காட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *